சிரிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் –பான் கீ மூன்

Read Time:4 Minute, 3 Second

un-genevaஇரசா­யன ஆயுதத் தடை ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டு­வ­தற்­கான சிரி­யாவின் விண்­ணப்­பித்தை ஐக்­கிய நாடுகள் சபை ஏற்­றுக்­கொண்­டுள்ள அதே­வேளை, சிரிய பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு கிடைக்கும் எனவும் ஐ.நா பொது சௌலாளர் பான் கி. மூன் தெரி­வித்-­துள்ளார் .

சிரியா தலை­நகர் டமாஸ்கஸ் புற­நகர் பகு­தியில் சென்ற மாதம் சிரிய ஜனா­தி­பதி படை­யினர் இர­சா­யன குண்­டு­களை வீசி நூற்­றுக்கணக்கானவர்களைக் கொன்­ற­தாகக் குற்றம் சாட்­டப்­பட்­டது. இதற்கு பதி­ல­டி­யாக சிரியா மீது ஏவு­கணைத் தாக்­குதல் நடத்த அமெ­ரிக்கா தயா­ரா­னது.

இந்­நி­லையில் சம­ர­சத்­துக்கு முன்­வந்த சிரி­யாவின் நட்பு நாடான ரஷ்யா, சிரி­யாவின் இர­சா­யன ஆயு­தங்­களை சர்­வ­தேசக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரச் செய்­வ­தா­கவும், இர­சா­யன ஆயு­தங்கள் தடுப்பு ஒப்­பந்­தத்தில் சிரி­யாவைக் கையெ­ழுத்­திட வைப்­ப­தா­கவும் கூறி­யி­ருந்­தது.

அதன் தொடர்ச்­சி­யாக, இர­சா­யன ஆயுதத் தடுப்பு ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­திட ஐ.நா.விடம் சிரியா விண்­ணப்­பித்­தது.

இது­கு­றித்து ஐ.நா. செய்தித் தொடர்­பாளர் தெரி­வித்­துள்­ள­தா­வது, ‘ஐ.நா. பொதுச் செய­லாளர் பான் கீ மூன், சிரி­யாவின் விண்­ணப்­பத்தை வர­வேற்­றுள்ளார்.

இந்த ஒப்­பந்­தத்தில் கையெ­ழுத்­தி­டு­வதன் மூலம், சிரி­யாவில் இனி இர­சா­யனத் தாக்­குதல் நடை­பெ­று­வது தடுக்­கப்­படும் என்றும், சிரி­யாவில் நிலவி வரும் பிரச்­சி­னை­க­ளுக்கு அர­சியல் தீர்வு பிறக்கும் என்றும் நம்­பு­வ­தாக ஐ.நா. பொதுச் செய­லாளர் தெரி­வித்தார்” என்று கூறினார்.

அமெ­ரிக்­காவில் இயங்­கி­வரும் தன்­னார்வ அமைப்­பான ‘ஆயுதக் கட்­டுப்­பாட்டு சங்கம்’ வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில், சிரி­யாவின் இர­சா­யன ஆயு­தங்­களை ஒழிப்­பது சிக்­க­லான காரியம் என்­றாலும், இர­சா­யன ஆயுதத் தடை ஒப்­பந்­தத்தில் சிரியா கையெ­ழுத்­தி­டு­வது ஒரு முக்­கி­ய­மான திருப்­பு­மு­னை­யாக அமையும்.

அபா­ய­க­ர­மான ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­பது, உள்­நாட்­டிலோ, பக்­கத்து நாடு­க­ளுக்கு எதி­ரா­கவோ அவற்றைப் பயன்­ப­டுத்­து­வது ஆகி­ய­வற்­றி­லி­ருந்து சிரி­யாவைத் தடுக்கும் எனத் தெரி­வித்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்தில் சிரியா எந்த அளவு ஒத்­து­ழைப்பு தரு­கி­றது என்­பது, அந்­நாடு தனது இர­சா­யன ஆயு­தங்­களின் இருப்பு விப­ரத்தைத் தரு­வதைப் பொறுத்தே அமையும் என்று கூறப்­ப­டு­கி­றது.

இத­னி­டையே, ‘இஸ்­ரேலின் இராணுவ பலத்­துக்கு ஈடு­கொ­டுக்­கத்தான் சிரியா இரசாயன ஆயுதங்களை வைத்துள்ளது” என்று ரஷ்ய ஜனாதிபதி கூறியுள்ள கருத்து, தனது கையிருப்பிலுள்ள இரசாயன ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுமோ என்ற கலக்கத்தை இஸ்ரேலுக்கு ஏற்படுத் தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர்மரபணு ஆவணங்களைக் கோருவதற்கு கனடா தீர்மானம்
Next post உலகின் மிக உயரமான விமான நிலையம் சீனாவில் திறப்பு