பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு குறித்து உயர்மட்ட விசாரணை!
ஹைட்டியிலுள்ள ஐ.நா சமாதானப்படையில் பணிபுரியும் இலங்கைப்படையின் உறுப்பினர் ஒருவரால் ஹைட்டி நாட்டு பெண்மீது மேற்கொள்ளபட்டதாக கூறப்படும் பலாத்கார முயற்சிக் குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு ஹைட்டிக்கு அனுப்பி வைக்க மூன்று சிரேஸ்ட அதிகாரிகளை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ரத்னாயக்க தெரிவு செய்துள்ளார்.
ஹைட்டியிலுள்ள இலங்கை இராணுவத்தின் இராணுவப் பொலிஸார் நடத்திவரும் விசாரனைக்கு மேலாக ஹைட்டியிலுள்ள இலங்கைப்படையின் ஐ.நா தளபதி தேவை ஏற்படுமிடத்து ஐ.நா விசாரணையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விசாரணை நீதிமன்ற உறுப்பினர்கள் 2013 ஒக்டோபர் முதல் வாரத்தில் இலங்கை திரும்பி தமது அறிக்கையை இராணுவ தளபதியிடம் கையளிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.