மாலக்கவிற்கு பாதுகாப்பு வழங்கிச் சென்ற இருவருக்கு காயம்
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக்க சில்வாவிற்கு பாதுகாப்பு வழங்கி சென்ற இருவர் கடும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவருக்கு பாதுகாப்பு வழங்கிச்சென்ற ஜீப் ரக வாகனம் தங்காலை வெடிகல் வெல்லாறே எனுமிடத்தில் விபத்துக்குள்ளாதிலேயே அந்த ஜீப்பில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளும் மற்றுமொருவருமே படுகாயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த ஜீப் குளத்துக்குள் பாய்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.