மாமியை கொன்ற மருமகன் தானும் தற்கொலை
குடும்பத் தகராறு காரணமாக 75 வயதான மாமியைக் கொலை செய்து விட்டு 31 வயது இளைஞன் ஒருவன் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இறத்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லே வேரகம என்னுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஓ.டபிள்யூ. அனுலாவதி என்ற மூதாட்டியே இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டவராவார். மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய ஜனககுமார சிங்க என்ற இளைஞன் தனது மனைவியான சந்திராவதி விஜேதுங்க(27) வையும் கத்தியால் குத்திக்காயப்படுத்தியுள்ளதுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காயமுற்ற சந்திராவதி மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட இளைஞன் வான் படை வீரரென தெரிய வந்துள்ளதாகக் குறிப்பிடும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.