50 அடி பள்ளத்தில் விழுந்து ஆட்டோ விபத்து: ஒருவர் பலி
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியின் 7ம் கட்டை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொருவர் சிகிச்சைக்கென பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 1.30 அளவில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து குறித்து பதுளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.