பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது
அரசாங்கத்தில் தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இருவர் அவிசாவளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரிஹான விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலொன்றுக்கு அமைய, மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து நியமனக் கடிதங்கள், அடையாள அட்டைகள், இறப்பர் முத்திரைகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
தொழில் வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி 5 பேரிடமிருந்து 12 இலட்சத்துக்கு அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மோசடி செய்த பணத்தில் ஒரு தொகை, கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படவுள்ளனர்.