மீன் உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் உயிரிழப்பு
அலகொடு என்ற மீன் இனத்தை உண்டு சுகயீனமுற்ற 27 பேரில் ஒருவர் இன்று (26) உயிரிழந்துள்ளார்.
25ம் திகதி மூதூர் பகுதில் அலகொடு மீன் உண்டவர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் ஆதார வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரி ஜே.பிரசாரிகா (59 வயது) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் வைத்திய பரிசோதனைக்கென திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பு வைக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த மீன் இனத்தை உட்கொள்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்ளுமாறு மூதூர் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.