சீன இளைஞருக்கு நெற்றியில் வளரும் 2ஆவது மூக்கு
சீனாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் நெற்றியில் 2ஆவது மூக்கு ஒன்று நெற்றியில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
ஷியாவோலியன் என்ற 22 வயதான சீன இளைஞரின் நெற்றியிலேயே இவ்வாறு மூக்கு வளர்க்கின்றது. இவர் கடந்த வருடம் கார் விபத்தொன்றில் சிக்கியுள்ளார். இதன் போது ஷியாவோலியனின் மூக்கு பாதிப்புக்குளாகியது.
அதன்பின் மூக்கின் கசியிழையம் அரிப்புக்குள்ளாகி அதில் நோய்த்தொற்று ஏற்பட்டது. இதனால் வைத்தியர்களால் அறுவை சிகிச்சை மூலம் மூக்கினைக் குணப்படுத்த முடியாமல் போனது.
எனவே மூக்கு மாற்று அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிப்படைந்து மூக்கிற்கு பதிலாக புதிய மூக்கினை வளர்க்க வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர். அவ்விளைஞரின் விலா எலும்பிலுள்ள இழையங்கள் மூலம் நெற்றில் செயற்கையாக வளர்க்கப்பட்ட மூக்கே தற்போது 2ஆவது மூக்காக வளர்ந்துள்ளது.
விலா இழையங்கள் மூக்கின் வடிவில் வெட்டி அமைக்கப்பட்டுள்ளது. புதிய மூக்கு தற்போது எதிர்பார்த்தது போல சிறப்பாக வளர்ந்துள்ளது.
எனவே விரைவில் மூக்கு மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ளலாம் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த மூக்கு முறையாக இயங்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
– See more at: http://metronews.lk/article.php?category=lifestyle&news=2291#sthash.3cd9Jgrk.dpuf