மோட்டார் சைக்கிளை கொள்கலன் வாகனம் மோதியதால், பெண் உயிரிழப்பு!
நீர்கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் தளுபத்தை பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.
நீர்கொழும்பு, துளுபத்தை கல்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான இந்திராணி பெர்னாண்டோ என்ற பெண்ணே இச்சம்பவத்தில் பலியானவராவார்.
கொச்சிக்கடை பிரதேசத்திலிருந்து கொழும்பை நோக்கி சென்று கொண்டிருந்த கொள்கலன் வாகனம் அதே திசையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண்ணின் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே அப்பெண் உயிரிழந்தார்.