அமெரிக்காவிற்கு யாரும் செல்ல வேண்டாம். இங்கிலாந்து, ஜெர்மனி எச்சரிகையால் பெரும் பரபரப்பு..!!

Read Time:2 Minute, 2 Second

images (5)அமெரிக்காவில் சுற்றுலா தலங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதால், அங்கு செல்ல வேண்டாம் என்று ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் தங்கள் நாட்டு மக்களை எச்சரித்துள்ளன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் பல அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்களை பார்க்க முடியாத நிலை உள்ளது. பாஸ்போர்ட், விசா அலுவலகங்கள் மூடப்படவில்லை என்றாலும் மக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் அமெரிக்கா செல்ல வேண்டாம் என்று ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சகம் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதேபோல், அமெரிக்காவில் விமான கட்டுப்பாடு, பாதுகாப்பு, குடியேற்ற அலுவலகங்களின் பணிகள் பாதிக்கப்படாவிட்டாலும், பல மணி நேரம் தாமதமாகலாம். இதனால் சுற்றுலா பயணிகள் திட்டமிட்டபடி தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் போகும்

எனவே, இப்போதைக்கு அமெரிக்கா செல்ல வேண்டாம் என்று இங்கிலாந்து அரசும் தனது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்காவில் சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டினர் தேசிய பூங்காக்கள், நினைவிடங்களை சுற்றிப் பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் இந்தோனேசியா, புரூனி உள்பட 4 நாடுகள் சுற்றுப் பயணத்தை அதிபர் ஒபாமா ரத்து செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நியூயோர்க்கில் கத்திமுனையில் மடோனா மீது வல்லுறவு..!!
Next post தாயின் ஐந்து பவுண் நகையை ஈடு வைத்த மகன் கைது..!!