பேஸ்புக் மூலம் தொந்தரவு: மாணவி தற்கொலையில் 2 சிறுமிகள் கைது

Read Time:2 Minute, 31 Second

ac46a3b0-0f84-470c-ac5c-5f52ebccf332_S_secvpfஅமெரிக்காவில் புளோரிடா லேக்லேண்டை சேர்ந்த மாணவி ரெபெக்கா அன்னா செட்விக். 7-ம் கிரேடு படித்து வந்த இந்த மாணவி கடந்த 5 வாரங்களுக்கு முன்பு, அப்பகுதியில் செயல்படாத சிமெண்ட் தொழிற்சாலை ஒன்றிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டாள்.

இதுகுறித்து ரெபெக்காவின் நண்பர்கள் 15 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சிறுமிகளின் பெற்றோர்கள் போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்துள்ளனர். இருந்தும் சிறுமிகள் அனைவரும் வலைதளத்தில் பேசிக்கொண்டு வந்தனர். அப்போது பேஸ்புக்கில் கருத்து தெரிவிக்கும் பகுதியில் ‘ரெபெக்கா தற்கொலை குறித்து அவள் கவலையடையவில்லை’ என்ற வாசகம் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து நடந்த விசாரணையில் முக்கிய குற்றவாளிகளான 12 மற்றும் 14 வயதான இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் ரெபெக்காவை நேரிடையாகவும், வலைதளம் மூலாமகாவும் வார்த்தைகளாலும் மனரீதியாகவும் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

இதனால் அவர்களின் கணினியும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் மீதான வழக்கு போல்க் கவுண்டி ஷெரிப் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அவர்கள் இருவரும் ரெபெக்காவை தற்கொலை செய்துகொள்ள தூண்டும் அளவிற்கு தேவையில்லாத தொந்தரவுகளை கொடுத்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இளம் வயதினரான குற்றவாளி சிறுமிகள் மீது மற்ற குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று நீதிபதி கூறினார்.

இவர்களுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், இளம் சிறார்களுக்கான சிறையில் அவர்கள் அடைக்கப்படுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவ்வப்போது கிளாமர் கிளாமர் படங்கள்..
Next post ஹிலாரியின் வாகனத்துக்கு லண்டனில் அபராதம்