ஹிலாரியின் வாகனத்துக்கு லண்டனில் அபராதம்

Read Time:1 Minute, 59 Second

2577_newsthumb_hilary450அமெரிக்க முன்னாள் வெளிவிவகார செயலாளரும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளின்டனின் வாகனம் அனுமதி பெறாமல் தரிக்கப்பட்டிருந்தமைக்காக லண்டன் போக்குவரத்துத்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் அவருக்கு அபராதச் சீட்டு வழங்கி பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளார்.

லண்டனில் நடைபெற்ற விருது வழங்கல் விழாவொன்றில் ஹிலாரி கிளின்டன் பங்குபற்றினார். இதற்காக வெஸ்ட்மின்ஸ்டர் சிற்றி பகுதிக்கு 10 பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் 5 கார்களில் அவர் வருகை தந்தார்.

ஆவரின் கார் சென் ஜேம்ஸ் சதுக்கப் பகுதியில் நிறுத்தப்பட்டது. அங்கு வாகனங்களை தரிப்பதற்கு மணித்தியாலத்துக்கு 3.30 ஸ்ரேலிங் பவுண் கட்டணம் செலுத்த வேண்டும்.


ஆனால் ஹிலாரின் வாகனம் அனுமதிச்சீட்டு பெறாமல் வாகனம் நிறுத்தியமைக்காக 80 ஸ்ரேலிங் பவுணுக்கான அபாராதச்  சீட்டொன்றை போக்குவரத்து உத்தியோகஸ்தர் வழங்கினார்.
அவ்வேளையில் ஹிலாரி கிளின்டன் அங்கிருக்கவில்லை.

அவரின் பாதுகாப்பு அதிகாரிகள் அது ஹிலாரியின் கார் என்பதை எடுத்துக்கூறி கடுமையாக வாதாடினர்.

ஆனால் சற்றும் பணியாத மேற்படி ஊழியர் அபராதச் சீட்டை வாகனத்தில் வைத்துவிட்டுச் சென்றார்.

மேற்படி ஊழியரின் துணிச்சலை பிரித்தானிய ஊடகங்கள் பாராட்டியுள்ளன.



Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேஸ்புக் மூலம் தொந்தரவு: மாணவி தற்கொலையில் 2 சிறுமிகள் கைது
Next post காதல் தொடர்பை கைவிட கோரியதால் மாணவன் தற்கொலை!