மாவீரர் தின அனுஸ்டிப்பு: தமிழக முகாமில் எழுவர் கைது 33 பேர் உண்ணாவிரதம்

Read Time:2 Minute, 11 Second

ltte.Maveerarமாவீரர் தின அனுஸ்டிப்புக்கு தடை விதித்த தமிழக பொலிஸாரை தாக்கிய இலங்கை அகதிகள் 7 பேர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

இலங்கை தமிழர்கள் 47 பேர் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த 27ம் திகதி மாவீரன் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக 26ம் திகதி முகாமில் உள்ள நினைவு தூண், இறந்தவர்கள் கல் வெட்டுகள் சுத்தம் செய்யப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அதை இடித்தனர்.

இதை கண்டித்து 27ம் திகதி முதல் முகாமில் இலங்கை தமிழர்கள் உண்ணாவிரதம் இருக்க தொடங்கினர்.

29ம் திகதி இரவு உண்ணாவிரதம் இருந்த போது மின்சார தடை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி கொண்ட இலங்கை தமிழர்கள் சிலர் பாதுகாப்பு பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்பு படை பொலிஸ்காரர் அருண்குமாரை கல்லால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அருண்குமாரை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அருண்குமார் இது குறித்து செங்கல்பட்டு நகர பொலிஸ் புகார் செய்தார். பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை தாக்கிய இலங்கை தமிழர்கள் விக்கரமன் சிங்கா, ராஜ்குமார், அருள், சிவரூபன், சசிகுமார், பாண்டியன், பத்மநாபன் ஆகிய 7 பேரை கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

மற்ற 33 இலங்கை தமிழர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெடுந்தீவு EPDP பிரதேசசபைத் தலைவர் கொலை: ஒருவர் கைது
Next post றெக்சியன் கொலைக்குப் பின்னால், EPDP உட்கட்சி முரண்பாடாம்?!