போலீசுக்கு தீராத தொல்லை கொடுத்த பெண்

Read Time:1 Minute, 31 Second

Emergency-use--0612பொதுமக்களுக்கு உதவிபுரிவதற்காக போலீஸ் துறையில் அவசர சேவை மையம் உள்ளது. இந்த தொலைபேசி எண்ணில் அழைத்தால் உதவிக்கு வருவார்கள்.

ஆனால் ஜப்பான் நாட்டில் உள்ள ஒசாகா நகர போலீசாருக்கு ஒரு பெண் 6 மாத காலத்தில் 15 ஆயிரம் முறை அழைத்து தீராத தொல்லை கொடுத்தார்.

ஒரு நாளைக்கு 927 தடவை தொடர்பு கொள்வார். ஒவ்வொரு முறையும் பேசும் போது பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது ஏதாவது புகார் கூறுவதுடன் இவர்களை கைது செய்யுங்கள் என்றும் முறையிடுவார்.

இவரது தொல்லை தாங்க முடியாமல் போலீசார் நேரில் விசாரணைக்கு சென்றால் அவரை பார்க்க முடியாது. ‘இன்டர்காம்’ மூலம் மட்டுமே பேசுவார்.

இதனால் இதோடு போன் செய்வதை நிறுத்தும்படி அவரை எச்சரிக்கை செய்து திரும்புவார்கள். அதன்பிறகும் அந்த பெண் திருந்தியபாடில்லை.

இதனை அடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று தோம்மி மொமியா (44) என்ற பெண்ணை கைது செய்து கையில் விலங்கு மாட்டி அழைத்து சென்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புறக்கோட்டை தீ: இரசாயன பகுப்பாய்வாளர், மின் பொரியிலாளர் பரிசோதனை
Next post குடாநாட்டு கொலைகளுடன், ஈ.பி.டி.பிக்கு தொடர்பு உள்ளதா??