WWE புகழ் ‘கிரேட் காளி’ (PHOTOS)

Read Time:2 Minute, 24 Second

3289_newsthumb_Thumஇந்தியாவைச் சேர்ந்த WWE புகழ் தொழில்சார் மல்யுத்த வீரரான கிரேட் காளி 2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி மல்யுத்த விளையாட்டில் அறிமுகமானார்.

தொழில்சார் மல்யுத்த வீரான கிரேட் காளியின் இயற்பெயர் டலிப் சிங் ராணாவாகும். 157 கி.கி நிறையுடைய 7.1 உயரமான கட்டுடலுடன் மல்யுத்தப் போட்டிகளில் மிரட்டும் கிரேட் காளி இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேசத்தில் 1972ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி பிறந்தார்.

ஆரம்பத்தில் ஜியன்ட் சிங் மற்றும் காளி எனும் பெயர்களில் மல்யுத்த விளையாட்டில் பங்குபற்றியவர் பின்னாளில் த கிரேட் காளி எனும் பெயரில் பல மல்யுத்த ரசிகர்களைக் கவர்ந்தார். 2006 ஆம் ஆண்டு முதல் WWE (World Wrestling Entertainment) 2007 ஆம் ஆண்டில் உலக அதிபார மல்யுத்த வீரராக மாறினார்.


மல்யுத்தம் தவிர பொலிவூட், ஹொலிவூட் திரைப்படங்களிலும் பிரென்ச் மொழிப்படமொன்றிலும் காளி நடித்துள்ளார். அத்துடன் பவர்லிப்ட் (ஒரு வகை பளுதூக்கல் போட்டி) போட்டிகளிலும் ஆர்வமிக்கவர் காளி.

கடவுள் நம்பிக்கைமிகுந்த கிரேட் காளி தினமும் கடவுள் வளிபாடுகளில் ஈடுபடுவார். இதன்பொருட்டே காளி எனும் பெயரையும் பயன்படுத்துகிறார். இதேவேளை கிரேட் காளி இறைச்சி மற்றும் அனைத்து வகை போதைப்பொருட்களையும் தவிர்த்து வருகிறார்.


உணவுக்கட்டுப்பாட்டில் மாமிச உணவுகளைச் சேர்க்காது சைவ உணவை மாத்திரமே பயன்படுத்துவதாகவம் தெரிவிக்கப்படுகின்றன.

கிரேட் காளி கடந்த 2002ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஹாமின்டெர் கோர் எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.


Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்சன் மண்டேலாவின் திருமணங்களும், காதல்களும்..
Next post லண்டன் – துபாய் விமானத்தில் பயணி அட்டகாசம்!