By 18 June 2006

ரோஜா மலருக்கு டோனி பிளேர் மனைவியின் பெயர்

Mr&Mrs.TonyBlair.jpegபிரிட்டனில், ஒரு வகை சிவப்பு ரோஜா மலருக்கு அந்நாட்டுப் பிரதமரின் மனைவியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் டோனி பிளேரின் மனைவி செர்ரி பிளேர். இவர் பிரபல மனித உரிமை வழக்கறிஞர். பெர்மிங்காமில் நடந்த தோட்டக்கலைக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த மணம்மிக்க அழகிய சிவப்பு நிற ரோஜா மலருக்கு செர்ரி என்று பெயர் சூட்டப்பட்டது. தன் பெயர் சூட்டப்பட்ட ரோஜா மலரின் நிறத்தைத் தாமே தேர்ந்தெடுத்ததாக வெள்ளிக்கிழமை கண்காட்சியில் கலந்துகொண்ட செர்ரி பிளேர் கூறினார். அவரது கணவர் டோனி பிளேரின் தொழிலாளர் கட்சியின் சின்னம் சிவப்பு ரோஜா என்பது குறிப்பிடத்தக்கது. செர்ரி ரோஜா விற்பனை மூலம் கிடைக்கும் பணம் செர்ரி பிளேர் பங்குவகிக்கும் அகதிகள் மறுவாழ்வுப் பணிக்கு அளிக்கப்படும்.



Comments are closed.