கடலில் நீந்தும் போது, மர்மமாக காணாமல் போன ஆஸி பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் (மறைந்து இன்றுடன் 46 வருடங்கள்)

Read Time:2 Minute, 54 Second

3406Ausகடலில் நீந்தும் போது இறந்தவர்கள்,காணாமல்போனவர்கள் குறித்த செய்திகள் வெளிவருவது சகஜம். ஆனால் ஒரு நாட்டின் பிரதமரே கடலில் நீந்தும்போது காணாமல் போனார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம். அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஹரோல்ட் ஹோல்ட் விக்டோரியா மாநிலத்திலுள்ள செவியட் கடலில் மூழ்கி இன்று டிசெம்பர் 17 ஆம் திகதியுடன் 46 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.

ஆனால் இன்று வரையில் இவரது மறைவு குறித்த அதிகாரபூர்வ ஆதாரங்களோ விளக்கங்களோ முடிவுகளோ அவரது உடல் கூடக் கிடைக்காது தொடர்ந்தும் மர்மங்களைத் தாங்கி நிற்கின்றன.

1966 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் 17ஆவது பிரதமராக தெரிவான ஹோல்ட் 1967 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17 ஆம் திகதி செவியட் கடலில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற வேளையில் மர்மமாக மறைந்தார்.

இத்தகவல் வெளியானவுடன் கடற்படை, விமானப்படையின் கப்பல்கள், ஹெலிகொப்டர்கள் மற்றும் தொண்டர்களின் மூலம் பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் ஹோல்டின் உடல் கூட கிடைக்கவில்i. இறுதியில் அவர் நீரில் மரணமடைந்துவிட்டதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்தது.

அவரின் மறைவு குறித்து அக்காலத்தில் பல்வேறு ஊகங்கள், வதந்திகள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.

சீன நீர் மூழ்கிக் கப்பல் மூலம் ஹோல்ட் கடத்தபட்டிருக்கலாம் என்பதும் அவற்றில் ஒன்றாகும். வெளிநாட்டு சுழியோடிகள் அல்லது சுறா அவரை தாக்கியிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அவர் மன அழுத்ததினால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது.

இருப்பினும் உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. பகாணாமல் போனோர் தொடர்பில் விக்டோரியா மாநிலத்தில் அறிமுகமான சட்டத்தின் மூலம் ஹரோல்ட் ஹோல்ட்டின் மறைவு குறித்தும் விசாரணைகள் ஆரம்பமாயின. தனது தந்தை திடீர் விபத்தின் மூலம் நீரில் மூழ்கி மரணமடைந்தார் என கடந்த 2005ஆம் ஆண்டில் அவரது மகன் நிகொலஸ் தெரிவித்திருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர் துஸ்பிரயோகம் காரணமாக வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு
Next post கள்ளக் காதலியின் கணவனை அடித்துக் கொன்று, காட்டில் சடலத்தை வீசிய நபர் கைது