தீவிர மன அழுத்த நோயில் சந்தன காமெடியர்!
குறுகிய காலத்திலேயே முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்ட சந்தன நடிகர் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து தவிர்க்க முடியாத காமெடியனாகி விட்டார்.
ஹீரோ இல்லாமல்கூட படம் எடுப்பார்கள் ஆனால் சந்தன காமெடி நடிகர் இல்லாமல் படங்களே இல்லை என்ற சூழலை உருவாக்கிவிட்ட சூழ்நிலையில் 1 லட்சத்தில் ஆரம்பித்த இவரது சம்பளம் தற்போது 13 லட்சத்தில் நிற்கிறது.
தற்போது வாய்ப்புகள் குவிந்து கிடக்கும் நிலையில் ஒருநாளைக்கு 4 படங்கள் என பிரித்து நடித்தால்கூட இவருக்கு 1 மணி நேரம்கூட ஓய்வு கிடைப்பதில்லையாம்.
அதிலும் 1 மணி நேரம் கூடுதலாக நடித்துக் கொடுத்தால் கூடுதலாக 1 லட்சம் கொடுக்கிறோம் என்று தயாரிப்பாளர்களும் சந்தன நடிகருக்கு பணத்தாசையை தூண்டி விடுகிறார்களாம்.
கூடுதல் பணம் கிடைக்கிறதே என்று சந்தன நடிகரும் ஓய்வில்லாமல் நடித்துக் கொடுக்கிறாராம்.
பகலில் ஷுட்டிங் ஸ்பாட் இரவில் டப்பிங் ஸ்பாட் என ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பதால் அவருக்கு தீவிர மனஅழுத்த நோய் உண்டாகியிருக்கிறதாம்.
இதனால் சந்தன நடிகர் மட்டும் அவதிப்படவில்லை அவரை பெரும் முதலீடு செய்து ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்களும் அவதிப்பட்டு வருகிறார்களாம்.
Average Rating