தேவயானி கோப்ரகடேவை கைதுசெய்ய உத்தரவிட்ட இந்திய வம்சாவளி அதிகாரி: புதிய தகவல்

Read Time:3 Minute, 13 Second

15-devyani-khobragade-300அமெரிக்க நியூயார்க் நகரில் இந்திய துணைத் தூதராக பணிபுரியும் தேவயானி கோப்ரகடே, விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக கூறி தனது மகளை பள்ளியில் விட காரில் வந்தபோது, பொதுமக்கள் முன்னிலையில் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சி பாவெலை நேரில் வரவழைத்து இந்தியா கண்டித்தது.

இதையடுத்து இந்தியாவில் கண்டனக்குரல் எழும்பியது. இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அடையாள அட்டையை இந்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்குமாறும் அரசு உத்தரவிட்டது. அத்துடன் அமெரிக்க தூதரகம் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள விமான நிலையங்களுக்குள் செல்லும் சிறப்பு அனுமதியையும் அரசு ரத்து செய்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுடனான சந்திப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சிறப்பு சலுகைகளையும் நிறுத்துவதற்கு மத்திய அரசு முடிவு செய்தது.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமான இந்த கைதுக்கு உத்தரவிட்டது யார் என்றால், அவர் இந்திய வம்சாவளியான ப்ரீத்பராரா என்ற நியூயார்க் வடக்கு பகுதி அட்டர்னி ஜெனரலே (45). அவர் பஞ்சாப் பிரோஸ்பூரை சேர்ந்த சீக்கிய தகப்பனாருக்கும், இந்து மதத்தை சேர்ந்த அம்மாவுக்கும் பிறந்தவரே.

இவரை சட்ட அமாலாக்கப்பிரிவின் அதிரடி நாயகன் கிளிண்ட் ஈஸ்ட்வுட் என்று சிலர் அழைக்கின்றனர். ப்ரீத் பராரா மேன்ஹாட்டனின் கவ்பாய் என்றும் அழைக்கப்படுகிறார். 2009-ம் ஆண்டு நியூயார்க் நகரின் அட்டார்னியாக பதவியேற்ற இவர் சட்ட விரோதமாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார்.

இதையடுத்து இந்திய வம்சாவளி தொழிலதிபரான ரஜத்குப்தா மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். பிரபலமான அவரை வால் ஸ்ட்ரீட்டின் பஸ்டர் என்றழைத்தனர். எந்த செயல்களிலும் முதல் நபராக இருக்கவேண்டும், தனது பெயர் எப்போதும் செய்திகளிலும் அடிபட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர் ப்ரீத் பராரா என்றும் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடத்தையில் சந்தேகம்: பள்ளி ஆசிரியையை கொன்று உடலை 3 துண்டுகளாக்கி வீசிய கொடூரம்
Next post சி.வியுடனான சந்திப்பை ஈ.பி.டி.பி புறக்கணிப்பு