சிறுவன் சிறுமியின் காதல் காட்சி: கொந்தளித்த பத்திரிகையாளர்கள்
விஷ்காம் படித்து விட்டு படம் டைரக்ட் செய்ய வந்திருக்கிறார் ஆஷிக் என்ற இளைஞர். தன்னுடன் படித்த பள்ளி, கல்லூரி நண்பர்களுடன் இணைந்து உ என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
அவரது நண்பர் அபிஜித் ராமசாமி மியூசிக் போட்டிருக்கிறார். ஜெயபிரகாஷ் கேமராமேன். வருண், நேகா, மதன் கோபால் நடித்திருக்கிறார்கள்.
எல்லோருமே ஆஷிக்கின் நண்பர்கள். 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இணைந்து இந்தப் படத்தை தயாரிச்சிருக்காங்க.
படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது படத்தின் பாடல் காட்சி போட்டுக் காட்டப்பட்டது. அதில் ஒரு பாடல் காட்சியை பார்த்து பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
12 வயது நிரம்பிய சூப்பர் சிங்கர் போட்டியில் வென்ற ஆஜித், ஒரு 7 வயது சிறுமியுடன் பருத்தி வீரன் கார்த்திக் பிரியாமணி ரேஞ்சில் டூயட் பாடினார்.
ஆஜீத் லவ் மூடில் அங்கும் இங்கும் நடக்க அந்த சிறுமி வெட்கத்தால் சிரித்தபடி அவனை பின் தொடர்கிறாள். அவளது சிவப்பு நிறம் பற்றி அவன் பெருமையாக பேசுகிறான்.
பாட்டு முடிந்ததும் பத்திரிகையாளர்கள் ஆஷிக்கை கேள்வியால் துளைத்து எடுத்து விட்டார்கள். அவற்றில் சில கேள்வி பதில்கள்…
ழூ எப்படி இந்த பாடலை எடுத்தீர்கள்?
பருத்தி வீரனை பார்த்து தான்.
ழூ சிறுவன் சிறுமிகள் டூயட் பாடுவது போன்று எடுத்திருப்பது சமூகத்தை பாதிக்காதா?
இது ஒருவன் சொல்லும் சினிமா கதையை இன்னொருவன் கற்பனை செய்கிற மாதிரியான காட்சிதான். அதற்கான காரணம் படத்தில் இருக்கிறது.
ழூ படத்தில் இருக்கட்டும். டி.வியில் பாடல் மட்டும் வரும்போது வீட்டில் உள்ள சிறுவர், சிறுமிகள் அதை பார்ப்பார்களே?
அந்த கண்ணோட்டத்தில் யோசித்து இதனை வைக்கவில்லை. படமாக பார்க்கும்போது அதை ஜாலியாகத்தான் எடுத்துக் கொள்வார்கள்.
இப்படியாக கடைசி வரை சமாளித்தார் டைரக்டர் ஆஷிக்.
Average Rating