கவர்ச்சி வழிய வழிய, சினிமா மேடைகளில் தோன்றும் நமீதா
கடை திறப்பு விழா நடிகை என்று பெயரெடுத்திருக்கும் நமீதா, தான் சினிமாவை சார்ந்திருந்தால் தான் அதுவும் சாத்தியமாகும் என்பதால், அவ்வப்போது சினிமா விழாக்களுக்கு விசிட் அடிக்கிறார்.
மேலும், சம்பந்தப்பட்ட படத்தின் இயக்குனரோ, தயாரிப்பாளரோ தனக்கு அழைப்பு விடுக்காதபோதும், யாராவது இப்படியொரு விழா நடக்கிறது என்று அந்த அலுவலகத்தில் இருந்து போன் செய்து பேசினாலே ஆஜராகி விடுகிறார்.
முன்னதாக, மாலை 6 மணிக்கு விழா என்றால், மதியத்தில் இருந்தே தடபுடலாக தன்னை தயார்படுத்தும் நமீதா, மேக்கப் போட்டு முடித்ததும், எந்த மாதிரி காஸ்டியூமில் செல்வது என்பதில் பெரிய கன்பியூசனே ஆகிறாராம்.
பல ஆடைகளை கண்ணாடி முன்பு நின்று அணிந்து பார்த்து, ஒருவழியாக 6 மணிக்குத்தான் முடிவுக்கு வருகிறாராம். காரணம், கவர்ச்சி பீரங்கியாக தன்னை எந்த டிரஸ் வெளிப்படுத்துகிறதோ அதுதான் தனது உடல்கட்டுக்கு கனகச்சிதமான டிரஸ் என்ற முடிவுக்கு வருகிறாராம் நமீதா.
பின்னர் அவசர அவசரமாக விழாவுக்கு செல்பவர், விழா நடந்து கொண்டிருக்கும் போதே கவர்ச்சி வழிய வழிய மேடையேறி அனைவரது பார்வையையும் தன் பக்கம் இழுக்கிறார்.
மேலும், அதுவரைக்கும், வெளியில் தெரியும் தனது உடம்பை துணியால் போர்த்தியிருக்கும் நமீதா, மேடையேறியதும், போர்த்திய மேலாடையை நீக்கி சுதந்திரம் கொடுத்து விடுகிறார். இதனால், ஒட்டுமொத்த அரங்கமும் ஒருகணம் தடுமாறிப் போகிறது.
அதேசமயம் மச்சான்ஸ் என்ற வார்த்தை சொல்லி கூட்டத்தையை கலகலக்க வைத்து வந்த நமீதா. இப்போது அதை மறந்து விட்டார்.
காரணம், மச்சான் என்ற வார்த்தையின் மகத்துவம் தெரியாமல் ஒரு விழா மேடையில் அமர்ந்திருந்த வைரமுத்து உள்ளிட்ட அனைவரையும் பார்த்து, மேடையில் இருக்கும் மச்சான்ஸ்க்கும் வணக்கம் என்று சொன்னார் நமீதா.
இதனால் அனைவருமே ஒருநிமிடம் ஆடிப்போனர்கள். ஆனபோதும் அதை கண்டுகொள்ளாமல் பேசி விட்டு சென்றார் நமீதா.
அதன்பிறகுதான் அவரது அபிமானிகள் சிலர், இந்த வார்த்தையை பெருசுகளைப்பார்த்து சொன்னால் காண்டாகி விடுவார்கள் என்று நமீதாவுக்கு அட்வைஸ் பண்ண, இப்போது எந்த மேடையிலும் மச்சான் என்ற வார்த்தையை உச்சரிப்பதில்லை நமீதா.
Average Rating