புல்மோட்டை மீனவர்களுடன் அமைச்சர் ஹக்கீம் பேச்சு

Read Time:1 Minute, 58 Second

003eபுல்மோட்டை மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சனிக்கிழமை நேரில் சென்று இந்த மீனவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

புல்மோட்டை கொக்கிளாய் கடலேரியில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு அவர்கள் பாவிக்கும் வலையை பயன்படுத்தக் கூடாதென மீன்பிடி திணைக்களம் தடை விதித்ததை எதிர்த்தே இந்த சத்தியாக்கிரப் போராட்டம் நடைபெற்று வருகின்றது.

வெளியிடங்களில் இருந்து வரும் மீனவர்களுக்கு இந்த ரக வலை பாவித்து தொழில் செய்து வருவதாக இந்த மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக அந்த இடத்திலிருந்தே மீன்பிடி அமைச்சர் ராஜித சேனாரட்ணவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

அமைச்சர் ராஜித சேனாரட்ன கொழும்பில் இது குறித்து விரிவாக பேசலாம் என அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுடம் இது குறித்துப் பேசிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீன்பிடி அமைச்சருடன் இது குறித்து பேசி தீர்வு எட்டப்படாவிட்டால் இந்த விடயத்தை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோட்டார் சைக்கிளுடன் அடக்கம் செய்யப்பட்ட, மோட்டார் சைக்கிள் அபிமானி
Next post கவர்ச்சி வழிய வழிய, சினிமா மேடைகளில் தோன்றும் நமீதா