உடம்புக்கு தீ வைத்த பிரதேச சபை உறுப்பினர் வைத்தியசாலையில் அனுமதி
பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் உடம்புக்கு தீ வைத்துக் கொண்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எட்டியாந்தோட்ட பிரதேச சபை உறுப்பினர் உபுல் சிசிர குமார என்பரே நேற்றுஇரவு இவ்வாறு தீ வைத்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.