பேச்சுவார்த்தைக்கான பிரதிநிதியாக, தலிபான்களால் இம்ரான் கான் நியமனம்

Read Time:1 Minute, 59 Second

Imran-Khan-Drone-Attackபாகிஸ்தான் அரசாங்கத்துடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான 5 பேர் கொண்ட குழுவில் அரசியல் வாதியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர்.

இம்ரான் கானின் கட்சி பேச்சுவார்த்தைக்கு பாரிய அளவில் ஆதரவு வழங்குகின்ற போதிலும், சமாதானப் பேச்சுவார்த்தையில் வேறு வகையில் தாம் உதவியை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்’ளது.

கடந்த மே மாதம் அதிகாரத்திற்கு வந்த பிரதமர் நவாஸ் செரீப், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்திருந்தார்.

கடுமையான தாக்குதல்கள் தொடர்கின்ற நிலையில், குழுவொன்றை பெயரிட்டுள்ளதன் மூலம் சமாதானத்திற்கான இறுதிச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துக் கொடுத்துள்ளதாக நவாஸ் செரீப் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு முன்வைந்துள்ளமை குறித்து கவனம் செலுத்துவதாக தெரிவித்திருந்த தலிபான்கள், தற்போது அதற்கு பதிலளித்துள்ளனர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான பிரதிநிதிகளாக பேராசியர் இப்ராஹீம் கான், இம்ரான் கான் மற்றும் மதத் தலைவர்கள் அடங்கலாக ஐவர் அடங்கிய குழுவினை தலிபான்கள் பெயரிட்டுள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சென்னைக்கு தங்கம் கடத்த முயன்றவர் கைது
Next post சர்வதேச விண்வெளித் தோட்டத்தில் விளைவிக்கப்படும் பயிர்கள்..