By 4 February 2014 0 Comments

ஸ்ருதியின் டி-டே படத்தை வெளியிட்டே தீருவேன்: தயாரிப்பாளர் உறுதி

shruthi-hassanஸ்ருதிஹாசன் பாலியல் தொழிலாளியாக நடித்த இந்திப் படமான டி-டே தமிழில் தாவூத் என்ற டைட்டிலில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

டி டேவை என் அனுமதி இன்றி தமிழில் வெளியிடுகிறார்கள். ஒப்பந்தத்தில் தமிழில் வெளியிடுவது பற்றி குறிப்பிடவில்லை. எனவே தமிழில் வெளியிடுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று ஸ்ருதி கூறியிருந்தார்.

ஆனால் படத்தை வெளியிட்டே தீருவேன் என்கிறார் டி.டே தயாரிப்பாளர்களில் ஒருவரான விவேக் ரங்காச்சாரி. அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தை தமிழில் டப் செய்து வெளியிடுவது பற்றி படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான நிகில் அத்வானியுடன் பேசி இருக்கிறேன்.

அவருக்கு எல்லா விஷயமும் தெரியும். இப்போது அனுமதியின்றி படத்தை டப் செய்வதாக கூறுகிறார். ஸ்ருதியை திருப்திப்படுத்தவே அவ்வாறு கூறுகிறார். இதனால் நான் பயந்துவிட மாட்டேன். வருகிற 7ந் தேதி அறிவித்தபடி படம் ரிலீசாகும் என்கிறார் ரங்காச்சாரி.



Post a Comment

Protected by WP Anti Spam