மாணவர்களுக்கு ஆபாச சீ.டி.க்கள் விற்பனை செய்தவருக்கு அபராதமும் சிறையும்
மாவனல்லை நகரில் பாடசாலை மாணவர்களுக்கு ஆபாச படங்கள் அடங்கிய வீடியோ சீ.டி.க்களை விற்பனை செய்த நபர் ஒருவருக்கு மாவனெல்லை நீதிமன்ற நீதிவான் 300 ரூபா அபராதமும் 6 மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளார்.
மாவனெல்லை நகரில் அமைந்துள்ள வீடியோ நாடாக்கள் விற்பனை செய்யும் வீடியோ நிலைய உரிமையாளருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.
மாவனல்லை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து குறிப்பிட்ட நிலையத்தில் திடீர் சோதனைகளை மேற்கொண்டு சில ஆபாசப் பட சீ.டி.க்களை கண்டு பிடித்து கைப்பற்றியதுடன் உரிமையாளரையும் கைது செய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
இதன்போது உரிமையாளர் பொலிஸாரின் குற்றச்சாட்டுகளுக்கு தான் குற்றவாளியென ஒப்புக் கொண்டதையடுத்து நீதிவான் அவருக்கு 300 ரூபா அபராதமும் 6 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 6 மாத தண்டனையையும் விதித்துள்ளார்.