தலைமை பொலிஸ் பரிசோதகரின் சடலம் மீட்பு
மேல் மாகாண இரகசிய பொலிஸ் பிரிவின் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஜூ. டப்ள்யூ. எம். சமரகோனின் சடலம் ஹோமாகம கொடகம பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தில் துப்பாக்கி சூட்டுக் காயம் காணப்படுவதாகவும், சடலத்திற்கு அருகில் துப்பாக்கி ஒன்றும் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின், நிலைய பொறுப்பதிகாரிக்கு இன்றுகாலை கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சடலம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.