சவுதி அரேபியாவில் தலையை துண்டித்து வாலிபருக்கு மரண தண்டனை
சவுதி அரேபியா நாட்டில் கொலை, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு சலீம் அல் ஜிகாதி என்ற பழங்குடி சமூகத்தை சேரந்த ஒருவரை வாலிபர் ஒருவர் தகராறு காரணமாக அடித்து உதைத்தார். இதில் அவர் இறந்து விட்டார். இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்தனர்.
அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அவர் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு இதுவரை 10 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்ட்டு உள்ளது. கடந்த ஆண்டு 78 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.