கொலம்பியாவில், 20 கிலோ எடையுள்ள 8 மாத குழந்தை!

Read Time:1 Minute, 39 Second

0447b9கொலம்பியாவை சேர்ந்தவர் யுனைஸ் ஃபேண்டினோ என்ற பெண்மணி. இவர் தனது குழந்தையான எட்டு மாத சாண்டியாகோ மெண்டோசாவுக்கு நாளுக்கு நாள் எடை அதிகரிப்பதாக ஷப்பி ஹார்ட்ஸ் என்ற நெஞ்சக மருத்துவமனைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இவரது கடிதத்தை கண்ட மருத்துவமனை இயக்குனரான சால்வடார் பாலேசியோ கோன்சாலேஸ் போகாட்டாவிலுள்ள தங்களது மருத்துவமனையில் அக்குழந்தையை சேர்த்து சிகிச்சை செய்து வருகிறார்.

தனது குழந்தை குண்டாவதற்கு, தானே காரணம் என அவனது தாய் மருத்துவரிடம் கூறினார். அவன் எப்பொழுது அழுதாலும் உடனடியாக பாலூட்டியதாலே அவன் இவ்வளவு குண்டானதாக அவர் தெரிவித்தார்.

தற்போது அவனது உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எடை குறைக்கப்படாவிட்டால் வருங்காலங்களில் அக்குழந்தைக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மற்றும் மூட்டு வலி ஏற்பட வாய்ப்பிருப்பதாக இயக்குனர் கோன்சாலேஸ் மேலும் தெரிவித்தார்.

ஆனால் அவன் குணமடைவதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் சூப்பர்-10 சுற்றில் இன்று மோதல்..
Next post கணவனின் பிறப்புறுப்பை, வாளால் வெட்ட முயற்சித்த பெண் கைது