இங்கேயும் பங்காளிச் சண்டையா? விஜயகாந்தின் சகோதரர் அதிமுகவில் இணைந்தார்..

Read Time:1 Minute, 34 Second

ind.vijaykanth_brotherஏற்கனவே திமுகவில் அண்ணன் – தம்பி சண்டை வலுப்பெற்றிருக்கும் நிலையில், தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தின் சகோதரர், தனது மனைவியுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார்.

இது குறித்து அதிமுக சார்பில் அனுப்பப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று (28.3.2014 – வெள்ளிக் கிழமை), மதுரை நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரை ஆதரித்து `பாண்டி கோயில் திடல், ரிங் ரோடு, மதுரை’ என்ற இடத்தில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

அப்போது, பொதுக்கூட்ட மேடையில், ஜெயலலிதாவை சந்தித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் சகோதரர் பால்ராஜ் மற்றும் அவருடைய மனைவி வெங்கடலெட்சுமி ஆகியோர், தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கத்தார் நாட்டில் வளர்ப்பு மகளை பட்டினி போட்டு கொன்ற தம்பதிக்கு ஜெயில்
Next post நடிகை ரதி மகனுடன், கமல் மகள் காதல்?