சவூதியில் வாசனைத் திரவியங்களை, பெண்களுக்கு ஆண்கள் விற்பனை செய்வதற்கு தடை!!

Read Time:2 Minute, 14 Second

5038saudiசவூதி அரேபியாவில் பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்களை ஆண்கள் விற்பனை செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதமளவில் பெண்களுக்கான பொருட்களை பெண்களை விற்பனை செய்யும் கடைகளில் பெண்களை மாத்திரம் பணியாற்ற அனுமதிக்கும் இலக்கை சவூதி அரேபிய அரசாங்கம் கொண்டுள்ளது. இதற்கான நடவடிக்கைளை படிப்படியாக சவூதி அரேபிய அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

இதன் மூன்றாவது கட்ட நடவடிக்கைகள் கடந்த ஞாயிறன்று அமுலுக்கு வந்தன. இதன்படி பெண்களுக்கான வாசனைத்திரவியங்கள், ஜலாபியா எனும் பாரம்பரிய ஆடைகள், கைப்பைகள், பாதணிகள், காலுறைகள், மற்றும் தாய்மார்களுக்கான பொருட்கள் ஆகியனவற்றை பெண்களுக்கு ஆண்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உள்ளுர் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.

இத்தகைய கடைகளில் பெண்களும் ஆண்களும் ஒரே சமயத்தில் பணியாற்றுவதற்கும் சவூதி அரேபிய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

அங்கு பணியாற்றும் சவூதி அரேபிய பெண்கள் காலை 9 மணிக்கும் முன் கடமைக்கு வருவதற்கும் இரவு 11 மணிக்கு மேல் பணியாற்றுவதற்கும் கடைகளின் உரிமையாளர்கள் கோர முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிகளின்படி 4 அல்லது அதற்கு அதிக எண்ணிக்கையான சவூதி அரேபிய பெண்கள் கடமையாற்றும் கடைகளில் அவர்களின் முகாமையாளராக அல்லது மேற்பார்வையாளராக சவூதி அரேபிய பெண்ணொருவர் நியமிக்கப்படவும் வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புத்த பெருமானின் உருவத்தை பச்சை குத்திய, இரண்டு பிரான்ஸ் பெண்கள் திருப்பி அனுப்பி வைப்பு
Next post சிம்புவை விட்டு விலகி விட்டேன்: ஹன்சிகா