தடை செய்யப்பட்டவர்கள், இலங்கை வந்தால் கைது

Read Time:2 Minute, 38 Second

ltte.nediyavan-kopi.alljpgஇலங்கை அரசால் தடை செய்யப்பட்டோர், இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத்தமிழர் அமைப்பை சேர்ந்தோரில் 32 பேர் இந்தியாவில் தங்கியுள்ளனர்.

அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் 30 ஆண்டுகளாக இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த போரானது 2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது.

வெளிநாட்டிலிருந்து செயற்படும் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 16 தமிழ் அமைப்புகள், இலங்கையில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்து, விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உள்ளிட்ட 16 அமைப்புகளுக்கும், அவற்றின் நிர்வாகிகள் 424 பேருக்கும் இலங்கை அரசு தடைவிதித்துள்ளது.

தடை செய்யப்பட்டோர் இலங்கைக்கு வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களைக் கைது செய்ய சர்வதேச பொலிஸாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை தேசிய புலனாய்வுத்துறைத் தலைவர் கபில கூறியபோது:
குளோபல் தமிழ் அமைப்பு, பிரிட்டிஷ் தமிழ் அமைப்பு ஆகிய பெயர்களில் செயற்படும் விடுதலைப் புலிகள் மற்றும் ஆதரவாளர்கள் பிரிட்டன் மற்றும் அமெரிக்கஅரசை அடிக்கடி சந்திக்கின்றனர்.

தென்ஆபிரிக்கத் தலைவர் மண்டேலாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க குளோபல் தமிழ் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது போன்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி வெளிநாட்டு அரசுகளைக் கேட்டுள்ளோம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘கத்தி’க்கு ராஜபக்ஷ நிதியுதவி?!
Next post புதையல் தோண்டிய பிக்குவிற்கு விளக்கமறியல்