உணவகத்தில் ஈக்களை கொன்றவருக்கு தண்டம்

Read Time:1 Minute, 44 Second

Questionபண்டாரகம நகரத்திலுள்ள உணவகத்தில் திண்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள்ளிருந்த ஈக்கள் உள்ளிட்ட பூச்சிகளை கொல்வதற்காக பூச்சிநாசினியை அந்த பெட்டிக்குள் ஸ்பிரே செய்த சேவையாளருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பண்டாரகம சுற்றுலா நீதிமன்ற நீதவான் ஜகத் கஹந்தகமகேவினால் இத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வைத்திய அதிகாரியினால் குறித்த நபர் நேற்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த பேக்கறி உற்பத்தி பொருட்களிலிருந்து கிருமிநாசி நாற்றம் அடிப்பதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் ஹோட்டலிலிருந்த சகல தின்பண்டங்களையும் உணவு பொருட்களையும் அகற்றுமாறும் அதிகாரிகள் பணித்திருந்தனர்.

சந்தேகநபரை கடுமையாக எச்சரித்து விடுதலை செய்த நீதவான், இவ்வாறான நடவடிக்கையில் இனிமேல் ஈடுபட்டால் அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) பிரிட்டனிலுள்ள பரபரப்பான வீதியில் நீர் சறுக்கல்
Next post இந்தியா சென்ற ஈழ அகதிகள் புழல் சிறையில் அடைப்பு