உடல் வெப்பத்தால் சார்ஜ் ஆகும் செல்போன்..
இன்று மனிதர்களின் கையில் 6-வது விரலாக மாறிவிட்டது செல்போன். நீண்ட நெடிய பயணங்களின் போது, இந்த அத்தியாவசிய பொருளுக்கு சார்ஜ் ஏற்றுவதுதான் பெரிய பிரச்சினை.
இதற்கு ஒரு வழி காண முயன்ற வல்லுனர்களுக்கு, மனித உடலின் வெப்பத்தில் இருந்து மின்சாரம் உருவாக்கி, அதன் மூலம் செல்போனை சார்ஜ் செய்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. பிறகென்ன, இதற்கான திட்டம் ஒன்றை தயாரிக்கும் பணியில் தென் கொரிய தொழில்நுட்ப நிறுவன அதிகாரிகள் இறங்கி விட்டனர்.
மனித உடலுக்கும் காற்றுக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க வெப்ப மாறுபாட்டின் மூலம் மின்சாரம் தயாரிக்கும் 2 வகையான தெர்மோ எலக்ட்ரிக் ஜெனரேட்டர்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கண்ணாடி மற்றும் மெல்லிய இழைகளால் உருவாக்கப்படும் இந்த ஜெனரேட்டர்கள் உடலில் அணியத்தக்க வகையில் உருவாக்கப்படுகின்றன.
இவற்றை மருத்துவத்துறையில் பயன்படும் சென்சார்களாக மேம்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து, செல்போன்களை சார்ஜ் செய்யும் கருவியாக தெர்மோ ஜெனரேட்டர்கள் மாற்றப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Average Rating