கதாநாயகன் ஆனாலும் காமெடியனாகவும் தொடர்ந்து நடிப்பேன்: சந்தானம்

Read Time:3 Minute, 51 Second

Santhanamவல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நாயகனாக சந்தானமும், நாயகியாக ஆஷ்னாவும் நடித்துள்ளனர். படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் சந்தானம், ஆஷ்னா, டைரக்டர் ஸ்ரீநாத், இசையமைப்பாளர் சித்தார்த், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் கோவையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்கள் முன்பு தோன்றினர்.

அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:–

கேள்வி : வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் பெயருக்கு காரணம் என்ன?

பதில் : எல்லா மனிதருக்கும் வாழ்க்கையில் பிரச்சினை உண்டு, அதை தன்னால் முடிந்த திறமையின் மூலம் எப்படி ஜெயிப்பானோ அதே போல் படத்தின் கதாநாயகன் இக்கட்டான சூழ்நிலையில் பிரச்சினையிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதை விளக்குவதே தான் படத்தின் தலைப்பு.

கேள்வி : படத்தின் வெற்றி குறித்து உங்கள் கருத்து ?

பதில் : படம் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இது எங்களுடைய ஒட்டு மொத்த அணியின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று தான் நினைக்கிறேன். இந்த படத்தை பெரிய வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

கேள்வி : காமெடி நடிகராக இருந்த நீங்கள் கதாநாயகன் ஆகிவீட்டீர்கள். மீண்டும் காமெடி கதாபாத்திரத்தில் நடிப்பீர்களா?

பதில் : கண்டிப்பாக காமெடி கதாபாத்திரத்திலும் நடிப்பேன். எனக்கு ஏற்ற நல்ல கதை வந்தால் அதிலும் கதாநாயகனாக நடிப்பேன்.

கேள்வி : முன்னணி நாயகர்கள், இயக்குனர்கள் படத்தை பார்த்துவிட்டு என்ன கருத்து தெரிவித்தார்கள்?

பதில் : விஜய், சூர்யா, உதயநீதி ஸ்டாலின், சிம்பு, ஜீவா என எல்லோரும் படத்தை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்து தெரிவித்தனர். ஒரு கதாநாயகனுக்கான தகுதி வந்துவிட்டதாக கூறினர். அதேபோல் அனைத்து டைரக்டர்களும் பாராட்டினார்கள்.

கேள்வி : –உங்களுடைய அனைத்து படத்திலும் வி.டி.வி. கணேசும் உள்ளார். அது பற்றி உங்களுடைய கருத்து என்ன?

பதில் : நாங்கள் முதலில் நல்ல நண்பர்கள். அதன் காரணமாக ஒற்றுமையாக இருக்கிறோம்.

கேள்வி : படத்தின் கதாநாயகி பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : கதாநாயகி ஆஷ்னா 40 விளம்பர படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மும்பையை சேர்ந்த இவரை பார்த்தால் யாரும் மும்பை பெண் என்று கூற மாட்டார்கள். சென்னை பெண் என்று தான் கூறுவார்கள்.

இவருடைய முதல் தமிழ்ப் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகும். இந்த படத்துக்கு இந்த பொண்ணு தான் பொருத்தமாக இருக்கும் என மும்பை சென்று தேர்வு செய்தோம்.

இவ்வாறு சந்தானம் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீமாந்திரா தேர்தலில் சிரஞ்சீவியை ஜீரோ ஆக்கிய தம்பி பவன்கல்யாண்
Next post 19 வருடங்கள் வீசாயின்றி தங்கியிருந்த இந்தியர் கைது