விவரம் தெரியாத ஹீரோயின்: திருப்பி அனுப்பிய பார்த்திபன்

Read Time:1 Minute, 52 Second

002rசினிமா விவரம் தெரியாமல் சந்திக்க வந்த நடிகையை திருப்பி அனுப்பினார் பார்த்திபன். ராதாகிருஷ்ணன் பார்த்திபன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு பார்த்திபன் இயக்கும் படம் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம். சந்தோஷ், விஜய் ராம், அகிலா, சாஹித்யா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதுபற்றி பார்த்திபன் கூறும்போது, ‘கதையே இல்லாமல் இப்படத்தை எடுக்கிறேன். சி.சத்யா, அல்போன்ஸ் ஜோசப், ஷரத், விஜய் ஆண்டனி, எஸ்.எஸ்.தமன் என 5 இசை அமைப்பாளர்கள் இசை அமைக்கின்றனர் என்றார்.

பட ஹீரோயின் அகிலா கிஷோர் கூறும்போது, ‘படத்தின் ஆடிஷனுக்கு வந்த நான் பார்த்திபனிடம் யாரோ ஒருவரிடம் பேசுவதுபோல் பேசினேன். உடனே அவர், ‘என்னைப்பற்றியும் எனது படங்கள் பற்றியும் உனக்கு எதுவும் தெரியவில்லை. அதையெல்லாம் தெரிந்துகொண்டு பிறகு ஆடிஷனுக்கு வா என்றார். வீட்டுக்கு சென்று விக்கிபிடியாவில் பார்த்திபன் பற்றி விவரம் படித்தேன்.

தேசிய விருது பெற்ற இயக்குனர், வித்தியாசமான நடிகர், வெரைட்டியான அவரது படங்கள் போன்ற விவரங்கள் அறிந்து மறுமுறை அவரை சந்தித்தபோது ஸாரி சொல்லிவிட்டு ஆடிஷனில் பங்கேற்றேன். என் மீது கோபம் எதுவும் காட்டாமல் ஹீரோயினாக தேர்வு செய்தார் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக கூட்டம் திரண்டதால் மேடை சரிந்தது, நமீதா காயமின்றி தப்பினார்..
Next post இரண்டு மாதங்களில், 77 புலிச் சந்தேகநபர்கள் கைது..