குத்தாட்டம் ஆட சொன்னதால், அதிர்ச்சி அடைந்த நந்திதா..
அட்டகத்தி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்தவர் நந்திதா. ஆரம்பம் முதலே ஒல்லிபிச்சான் உடம்புடன் நடித்து வந்தார். இப்போது உடல் எடையை கூட்டுகிறார்.
தற்போது பரத்துடன் சித்த வைத்திய சிகாமணி, விஜய் சேதுபதியுடன் இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களில் நடிக்கிறார்.
திரையுலகுக்கு வந்து 6 வருடம் ஆகிவிட்டாலும் எந்த படத்திலும் நந்திதா ஹீரோவுக்கு இணையாக வேகமாக நடனம் ஆடியதில்லை.
பரத்துடன் நடிக்கும் படத்தில் குத்தாட்டத்துக்கு படுவேகமாக ஆடி வேண்டி இருந்ததால் அதற்காக பயிற்சி பெற்றார்.
இதுபற்றி நந்திதா கூறும்போது, ‘பள்ளி, கல்லூரியில் படிக்கும்போதும் குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஜாலியாக நடனம் ஆடி இருக்கிறேன். ஆனால் சினிமா நடனம் முற்றிலும் வித்தியாசமானது.
குத்தாட்ட காட்சியில் வேகமாக ஹீரோவுடன் ஆட வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் ஷாக் ஆனேன். ஹீரோ ஒத்துழைப்புடன் ஒருவழியாக ஆடி முடித்தேன்.
புதிய படத்துக்காக கொஞ்சம் வெயிட் போட வேண்டி உள்ளது. இதற்காக டயட் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் மூக்கமுட்ட வெளுத்துக் கட்டுகிறேன் என்றார்.
Average Rating