நான் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன் : சுஷ்மிதா சென்
அழகான விழாவில் நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன் என முன்னாள் பிரபஞ்ச அழகியான நடிகை சுஷ்மிதா சென் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் திருமணம் செய்யாமல் உள்ள 38 வயதான சுஷமிதா சென் 2 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார். முன்னர் நடிகர் ரண்டீப் ஹுடா, இயக்குநர் விக்ரம் பட் உள்ளிட்ட மேலும் சிலருடன காதல் கிசுகிசுக்கள் வெளியானதுடன் திருமணம் செய்துகொள்ளப் போவதாகும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அண்மையில் திருமணம் குறித்து கேட்டபோது, ‘ஒரு முறைமையில் நான் வாழ வேண்டும் என நான் நினைக்கவில்லை. 18 வயதில் பட்டம்பெற்று 22 வயதில் திருமணம் குறித்து பயந்து திருமணம் செய்து 27 வயதில் முதல் குழந்தையைப் பெறல் என எமது சமூகம் உருவாக்கி முறைமை அது. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை’ என்றார்.
‘ஒவ்வொருவரினதும் டி.என்.ஏ வித்தியாசமானது. நான் நிச்சயமாக திருமணம் செய்துகொள்வேன். இது அழகான திருமணமாக இருக்கும் என்பது உறுதி’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Average Rating