80000 பார்வையாளர்கள் முன்னிலையில் காதலியிடம், திருமண விருப்பத்தை வெளியிட்ட குத்துச் சண்டை வீரர்

Read Time:1 Minute, 29 Second

002iபிரித்தானிய பிரபல குத்துச் சண்டை வீரரான கார்ல் புரொச் குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற சமயத்தில் மேடையில் பார்வையாளர்கள் முன்னிலையில் தனது காதலியிடம் அவரை திருமணம் செய்வதற்கான விருப்பத்தை வெளியிட்டு அவரை திகைப்பில் ஆழ்த்தினார்.

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

கார்ல் புரொச் (36 வயது) லண்டனிலுள்ள வெம்ளி மைதானத்தில் இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியின் போது 80000 பார்வையாளர்கள் முன்னிலையில் தனது காதலியான மொடல் அழகி ரேசல் கோர்டிங்லியிடம் (27வயது) அவரை திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்ப அதிர்ச்சிக்குள்ளான ரேசல் உடனடியாக அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் இந்த காதல் ஜோடிக்கு ஏற்கனவே இரு பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னை காதலித்த 70 வயது நபருடன், திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்
Next post கமல்ஹாசனுக்கு போட்டியாக 12 கெட்அப்பில் வித்யா பாலன்..