By 5 June 2014 0 Comments

பாதுகாப்பளிக்க சென்ற பொலிசாரை, அடிக்கப் போன “மண்டையன் குழு” தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன்!! (அதிர்ச்சி வீடியோ & படங்கள்)

003lவடக்கில் இராணுவ, பொலிஸ் அராஜக ஆட்சி நடக்கின்றது என கூட்டமைப்பினர்கள் சதாகாலமும் பத்திரிகைகளில் பேட்டியளித்து புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால்.. நாட்டில் உள்ள நிலமையை பார்த்தீர்களானால் வேறுமாதிரியான சூழ்நிலை தான் காணப்படுகின்றது.

இந்நாள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மண்டையன் குழு தலைவருமான சுரேஸ் பிரேமசந்திரன் தனக்கு பாதுகாப்பளித்த பொலிஸ்காரனையே வம்புக்கு இழுத்து அடிக்க போகின்ற நிலமையை இன்று காணப்படுகின்றது.

கூட்டமைப்பு எம்.பி மாரை சிங்கள பொலிஸார்தான் எங்கு சென்றாலும் பாதுகாப்பாக கூட்டிக்கொண்டு திரிகின்றார்கள். ஆனால்.. பாருங்கோ! பாதுகாப்புக்கு செல்லும் பொலிஸார் தப்பித் தவறி தன்னும் சினேகிதபூர்வமாக கூட, “நீங்க போங்க மாத்தையா”என்றுசொல்லி அவர்களின் தோளின் மேல் கைகூட போடக் கூடாதாம்.

அப்படி எதாவது நடந்தால்.. (பாதுகாப்புக்கு போன பொலிஸ்காரன் அப்பாவிதனமாய் தோளில் கைபோட்ட போது) “டேய்”.. என்ர.. தோளிலேய நீ கைபோடுகிறாயா?.. தோளில் கைபோட்டால் உதைச்சு போடுவன் உனக்கு” என்று சொல்லி  பொலிஸாரையே அடிக்கப் போகின்ற  நிலமை தான்  இன்றைய நிலமையாய்  மாறியுள்ளது.

இந்த மாதிரியான அதிக உச்சக்கட்ட சுதந்திரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தது?

புலிகள் இவர்களை வைக்க வேண்டிய இடத்தில்தான் வைத்திருந்தார்கள்.  இதேநேரம்..,  தமிழ்  பொலிஸ்காரர்கள்  சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு பாதுகாப்புக்கு நின்றிருந்தால் கட்டாயம்  “காதாவடியை பொத்தி” வாங்கி கட்டியிருப்பார்.

“டேய்” என்று பேசுகின்ற பாராளுமன்ற  உறுப்பினர் ஒருவர் நம்மட நாட்டில இருக்கின்றார் என்றால்.. அதுவும்  எங்கட படிச்ச யாழ்பாணத்தாரால் தெரிவு செய்யப்பட்ட சுரேஸ் பிரேமசந்திரன் என்பவர் மட்டுமே .

சிங்களவன் எவ்வளவுதான் அதிகாரத்துடன் இருந்து அட்டகாசம் செய்தாலும், மரியாதைக்குரியவர்களை “மாத்தையா” என மரியாதை கொடுத்து தான் அழைக்கிறான். எங்கட அரைகுறை அரசியல்வாதிகள் தான் “டேய்” என்று மரியாதையாக  பேசத்  தெரியாமல்  இன்னமும்  பேசிக்கொண்டு   திரிகின்றார்கள்.

இப்ப விளங்குதா…. இவங்களுக்கு ஏன் பொலிஸ் அதிகாரம் கொடுக்க மறுக்கிறார்கள்? என்று. இவங்கட கையில பொலிஸ் அதிகாரம் கிடைத்தால் கட்டாயம் அது புலிகளிகளின் ஆட்சி போன்று.. தமிழர்கள் பிரதேசங்களில் சர்வாதிகார ஆட்சிதான் நிலவும். தமிழர்கள் பேச்சுரிமையே இன்றிதான் வாழவேண்டிய நிலமை ஏற்படும். அது மட்டுமல்லாது லஞ்சம், கட்ட பஞ்சாயத்து , ஆட்கடத்தல், கொலை, கொள்ளை போன்றவை மீண்டும் தலை தூக்க முனையலாம்.

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களுக்கு பொலிஸ் அதிகாரம் வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைத்தாலும், தங்களுடைய பாதுகாப்புக்கு தமிழ் பொலிஸார்களை நியமியுங்கள் என இதுவரை எந்தவொரு கூட்டமைப்பு  பாராளுமன்ற  உறுப்பினர்களும்  அரசாங்கத்தினரிடம்  கோரிக்கை  முன்வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடதக்கது.

காரணமிருக்கு... தமிழ்  பொலிஸாரின் மீதோ அல்லது   தமிழ் உத்தியோகத்தர்களின் மீதோ இவர்களுக்கு நம்பிக்கையில்லை என்பது  ஒன்று, தமிழ்  உத்தியோகத்தர்களை  அடிமைகள்  மாதிரி  வைத்திருந்து   இவர்கள் வேலை வாங்க முடியாது, தமிழ்  உத்தியோகத்தர்கள்  பெரிய சட்டம் கதைப்பார்கள்,   தமிழ் பொலிஸார்   ஒருவரை தங்களோடு வைத்திருந்தால், இவர்கள் செய்யும்   பிராட்டுதனங்கள் (சுத்துமாத்துகள்)தெரிய வந்துவிடும் என்கின்ற பயம் இவர்களுக்கு  எப்போதுமுண்டு.

மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆயுதகுழுவில்   ஆயுதத்துடன் நடமாடிக் கொண்டிருந்த போது… எப்படியிருந்தாரோ அப்படியே.., அதே சண்டித்தனமான குணம் மாறாமல், இன்றும் இருந்து கொண்டிருக்கிறார்.

என்ன கையில் துப்பாக்கி இல்லை. துப்பாக்கி வைத்திருக்க கூடிய சந்தர்ப்பமும், சுட்டு தள்ளக்கூடிய சந்தர்பமும் கிடைத்திருந்தால் இன்றும் பல ஆயிரக்கணக்காண பேருக்குக்காவது மண்டையில் போட்டுக் கொண்டிருந்திருப்பார்.

நடந்தது இதுதான்..

காணாமல்  போனவர்களை வைத்து கொண்டுதான் இப்போ கூட்டமைப்பினர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால்.. இதுவரை யாரையும் கண்டுபிடித்து கொடுக்கவுமில்லை…. அதேநேரம் சிறையில் வாடும் எமது உறவுகளில் ஒருவரை தன்னும் இதுவரை விடுதலை செய்வதற்கு முயற்சிக்கவுமில்லை.

தங்களுடைய அரசியல் பிழைப்புக்காக காணாமல் போனவர்களின் உறவினர்களை கூட்டிக் கொண்டு ஊர்வலங்கள், போராட்டங்கள நடத்துகின்றார்களே ஒழிய, காணாமல் போனவர்கள் மீது அனுதாபமோ அல்லது அவர்களை கண்டுபிடிக்க கொடுக்க வேண்டும் என்கிற உண்மையான அக்கறையோ அல்ல…

அந்தவகையில்.. . இன்றும் காணாமல் போனோர்   தொடர்பாக முல்லைத்தீவில்.., பொதுமன்னிப்பும்   பாதுகாப்பும் வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் உத்தரவாதத்தையடுத்து, இராணுவத்தினரிடம் சரணடைந்து பின்னர் காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரியும், இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனுக்கள் மீதான நீதிமன்ற விசாரணையைத் துரிதப்படுத்தக் கோரியும் முல்லைத்தீவு பேருந்து நிலையத்தருகில் ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இதில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், அன்ரனி ஜெகநாதன், சிவாஜிலிங்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் மற்றும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மற்றொரு ஆர்ப்பாட்டம்…

கடத்தப்பட்டவர்கள், காணாமல் போயுள்ளவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளவர்களைக் கண்டுபிடித்து விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதற்கு எதிராக ஒன்று கூடியவர்கள் விடுதலைப் புலிகளினால் பிடித்துச் செல்லப்பட்டதன் பின்னர் காணாமல் போயுள்ள தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியதுடன், விடுதலைப் புலிகளினால் தமது பிள்ளைகள் பிடித்துச் செல்லப்பட்டதை நினைவூட்டி கண்டனம் தெரிவித்திருந்தனர்.


இதில் கலந்துகொண்ட இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் எற்பட்டு...அங்கு ஆர்ப்பாட்டத்தில கலந்துகொண்ட கிழவன் ஒருவர் சுரேஸ் பிரேமசந்தினை அடிக்கபோன இடத்தில்.. சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பியும் கிழவனுக்கு  அடிக்க  முற்பட்ட போது  அங்கு பதற்ற நிலை ஏற்பட்டு..,

பாதுகாப்புக்கு நின்ற பொலிஸார் இருபகுதியினரையும் சமாதானப்படுத்தி , சுரேஸ் பிரேமசந்திரனை அழைத்து சென்றபோது..,

கிழவனை அடிக்கமுடியாத ஆத்திரத்தில் நின்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் சமாதானப்படுத்தி கூட்டிக்கொண்டு போன பொலிஸ்காரனை தாக்க முற்பட்ட நிலையில்.., (பொலிஸ் விடுவானா? ) அவனும்   தன்னுடைய தொப்பியையும், துப்பாக்கியையும்  களற்றி   கொடுத்துவிட்டு  நாடாளுமன்ற உறுப்பினரை   சுரேஸ் பிரேமசந்திரனை தாக்க முயன்றவேளை…


அங்கு நின்ற பொலிஸார் தடுத்ததால் சுரேஸ் பிரேமச்சந்திரன் தப்பித்துக் கொண்டார். இருந்தாலும் தாக்க முற்பட்ட பொலிஸ்காரனை “உன்னை பிறகு பார்த்துக் கொள்ளுகின்றேன் என்று படுமோசமாக பேசியுள்ளார் ( காணொளியில் பாருங்கள் புரியும்)

இது மட்டுமல்லாது.., சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆர்ப்பாட்டத்திற்காக யாரையோ காசுகொடுத்து கூட்டிக் கொண்டு வந்துவிட்டு பின்பு காசு கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்  போலும்…. அவனும் தனக்கு காசு தரவில்லை என பேசியவாறு சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு தாக்க போன சம்பவமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

நீங்களே இந்த வீடியோவைல பாருங்கள்… எல்லாம் புரியும்.

இரண்டு, மூன்று தடவைகள நன்றாக உற்றுப் பாருங்கள் …

1. உண்மையில்… பொலிஸ்காரன், சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு அப்படி என்ன செய்தவன் என்பதை பாருங்கள்? **அப்படி ஒன்றுமே செய்யவில்லை.

2. சுரேஸ் பிரேமச்சந்திரனுடன் சண்டைக்கு போன கிழவனை பார்த்து கைநீட்டி“bastard” (வேசை மகன், பொத்தடா வாயை ) என பேசுகின்றார். படுமோசமான பொறுக்கி தான், இப்படி பேசுவான். படிச்சவன் என்றால் நாகரீகமாக, மரியாதையா நடந்து கொள்வான், பண்பாக பேசுவான். இவரெல்லாம் படிச்சவரா?

இப்படி இங்கிலிசில பேசி, திட்டினால் தமிழர்கள் சிலநேரம் இதையிட்டு பெருமை கொள்வார்கள்.

சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸார் இல்லாவிட்டால் கட்டாயம் சுரேஸ் பிரேமச்சந்திரனும், அவரின் அடியாட்களும் கிழவனுக்கு அடித்திருப்பார்கள். புலம்பெயர் தேசத்து தமிழர்களுக்கு இப்படியான செயல்கள் தமிழ்தேசிய வீரவிளையாட்டாக பார்க்கப்படும்.

(இவர் மட்டுமல்ல, வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலான கூட்டமைப்பு உறுப்பினர்களும் பணபலம், அதிகாரபலம், ஆள் பலம், சிறிலங்காவின் பொலிஸ் பாதுகாப்பு போன்றவைகளோடு ரவுடிக் கூட்டங்கள் சினமாவில் உலா வருவது போன்று தான் யாழகுடாநாட்டில் சுற்றிவருவதாக நாட்டுக்கு போய் வருகின்றவர்கள் கூறுகின்றார்கள். )

3. இவருடைய நடத்தை காரணமாக.. பொலிஸ்காரர்கள் சுரேஸ் பிரேமச்சந்திரனை பார்த்து சிங்களத்தில் என்ன சொல்லுகிறார்கள் தெரியுமா?

பொலிசிட்ட காணுவத ஹரி உட்தோ” (“போலிசுக்கு அடிக்க வாரியா, கரிப் பு…. மகனே”)என்று மிகக் கேவலமாக பேசுகிறார்கள். மரியாதை கொடுத்தால் தானே யாரும் மரியாதை கொடுப்பார்கள்.

4. கடைசிக்கட்ட கட்டத்தில் ..சுரேஸ் பிரேமச்சந்திரன் படுமோசமாக பேசியதை இந்த வீடியோவை எடுத்து வெளிநாடுகளில் படம் காட்ட முற்பட்ட இணைய தளத்தினர்கள் ‘கட்’ பண்ணி வெளியிட்டுள்ளார்கள். (அது படுதூசணமாக பேசப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவிக்கின்றார்கள்)

4.இப்படிப்பட்ட சுரேஸ்பிரேமச்சந்திரனிடம் சாதாரண பொதுமக்கள் சென்று கதைத்து எதாவது காரியம் செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?

சுரேஸ் பிரேமச்சந்திரன் என்பவர் ஒரு படிச்சவரா? தமிழர்களுக்கு தலைமை தாங்க கூடிய தகுதி இவருக்கு இருக்கா? இனியும் கூட்டமைப்பு தலைமை சுரேஸ் பிரேமச்சந்தின், சிவாஜிலிங்கம், போன்றோரை கூட்டமைப்புக்குள் வைத்திருக்க வேண்டுமா??

–இலக்கியன்–Post a Comment

Protected by WP Anti Spam