ஆப்கான் தேர்தல்: ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்

Read Time:1 Minute, 39 Second

006sஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை. எனவே, மீண்டும் மறு அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

தேர்தலில் பொதுமக்கள் ஓட்டு போடக் கூடாது என தலிபான் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர். அதையும் மீறி பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் அதன் மூலம் 52 சதவீதம் வாக்குபதிவு நடைபெற்றுள்ளது.

இதனால் தலிபான் தீவிரவாதிகள் கடும் ஆத்திரம் அடைந்தனர். ஹீராத் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் ஓட்டு போட்டு 11 முதியவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை தலிபான் தீவிரவாதிகள் பிடித்து சென்றனர்.

எங்களது எச்சரிக்கையையும் மீறி எப்படி தைரியமாக ஓட்டு போடலாம் என மிரட்டினர். பின்னர் ஓட்டு போட்டதற்கு அடையாளமாக மை வைக்கப்பட்டிருந்தது. அவர்களின் அந்த கைவிரல்களை வெட்டி துண்டித்தனர்.

இதனால் அவர்கள் வலியால் துடித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்த தகவலை ஆப்கானிஸ்தான் உள்துறை துணை மந்திரி ஆயூப் சலாங்கி தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உத்திரப் பிரதேசத்தில் துப்பாக்கி முனையில் பெண் பலாத்காரம்
Next post ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா