By 24 June 2014 0 Comments

மதுபோதையில் பள்ளிவாசல்கள், கடைகள் மீது தாக்குதல் நடத்திய நால்வர் கைது

arrest (1)குரு­ணாகல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மல்­ல­வ­பிட்­டிய மற்றும் நக­ரி­லி­ருந்து சுமார் 6 கிலோ­மீற்றர் தொலைவில் உள்ள கொக்க­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இப்­பா­க­முவ, பன்­னல ஆகிய பகு­தி­களில்

இரு பள்­ளி­வா­சல்கள் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளன. அத்­துடன் இப்­பா­க­முவ தெகல்­கொடை பகு­தியில் முஸ்லிம் கடை தொகுதி ஒன்றும் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

நேற்று முன்தினம் இரவு இ­டம்­பெற்ற இந்த தாக்­கு­தல்­களின் போது பள்­ளி­வா­சல்­க­ளி­னதும் கடை­க­ளி­னதும் கண்­ணா­டி­க­ள் சேதமடைந்துள்ளன.

நேற்று முன் தினம் இரவு 7.00 மணி­ய­ளவில் குரு­ணாகல்-தம்­புள்ளை பிர­தான வீதியில் உள்ள கொக்­க­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இப்பாகமுவ பன்­னல பள்­ளி­வாசல் மீதும் இப்­பா­க­முவ, தெகல்­க­முவ பகு­தி­க­ளி­லுள்ள கடைத்­தொ­குதி மீதும் மது­போ­தையில் வந்த குழு­வி­னரால் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இதனால் அப்­ப­கு­தியில் பெரும் பதற்றம் நில­வி­யது.

பன்­னல பகு­தியில் வீதி­யோரம் உள்ள பள்­ளி­வாசல் மீது மது போதையில் வந்த சுமார் 15 பேர் கல்­வீச்சு தாக்­கு­தலை மேற்­கொண்­டுள்­ளனர்.

இதனால் பள்­ளி­வா­சலின் முன்­பக்க கண்­ணா­டிகள் கடும் சேதத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன.

அத­னை­ய­டுத்து அங்­கி­ருந்து தப்பிச் சென்ற குறித்த குழு­வினர் குரு­ணாகல் தம்­புள்ளை பிர­தான வீதியில் இப்­பா­க­முவ சந்­தியில் உள்ள கடை தொகு­தி­யி­லுள்ள முஸ்லிம் கடை­களை உடன் மூடு­மாறு கூச்­ச­லிட்­டுள்­ளனர்.

இதன் போது அந்த பகு­தியில் சிவில் உடை­யி­லி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் ஏன் கடை­களை மூட­வேண்டும் என குறித்த குழு­வி­ன­ரிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து அக்­கு­ழு­வினர் மேலும் கூச்­ச­லிட்ட வண்ணம் கடைகள் மீது கற்கள் மற்றும் பொல்­லு­களால் தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர். இதனால் கடை­களின் முன்­பக்க கண்­ணா­டி­க­ளுக்கு கடும் சேதம் ஏற்­பட்­டது. இதனைத் தொடாந்து அப்­ப­கு­தியில் உள்ள முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் அனைத்தும் மூடப்­பட்­டன.

சம்­ப­வத்தை அடுத்து பிர­தேச வாழ் முஸ்­லிம்கள் பெரும் அச்­சத்­துக்கு உள்­ளா­கி­ய­துடன் அப்­பி­ர­தே­ச­மெங்கும் பெரும் பதற்றம் ஏற்­பட்­டது.

அத­னை­ய­டுத்து கொக­க­ரெல்ல பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்­த­துடன் வடமேல் மாகாண சபையின் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பினர் றிஸ்வி ஜவ­ஹர்ஷா மற்றும் இப்­பா­க­முவ பிர­தேச சபை தவி­சாளர் டீ.ஜே.சுமித் ஆகி­யோரும் ஸ்தலத்­துக்கு சென்று பதற்ற நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வரும் வித­மாக பொலி­ஸா­ருடன் கலந்­து­ரை­யா­டினர்.

தமது ஊரினை அண்­மித்த பகு­தி­களில் வசிக்கும் பெரும்­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்­த­வர்­களே இந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தா­கவும் அவர்கள் குறிப்­பிட்­டனர்.

மல்­ல­வ­பிட்­டிய பள்­ளி­வாசல் மீதும் தாக்­குதல் இத­னி­டையே குரு­ணாகல் – கண்டி பிர­தான வீதி­யுஇல் உள்ள மல்­ல­வ­பிட்­டிய பகு­தியில் உள்ள பள்­ளி­வாசல் மீதும் நேற்று இரவு தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது. இந்த தாக்­குதல் கார­ண­மாக பள்­ளி­வா­ச­லுக்கு சிறிது சேதம் ஏற்­பட்­டுள்­ள­தாக பிர­தேச மக்கள் குறிப்­பிட்­டனர்.

பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தி­விட்டு தப்பிச் செல்ல முயன்ற இரு­வரை பிர­தேச மக்கள் மடக்கிப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

எவ்­வா­றா­யினும் இவ்­விரு சம்­ப­வங்­க­ளு­டனும் தொடர்­பு­டை­ய நால்வரை பொலிஸார் நேற்று கைது செய்­தனர்.

மது போதையில் இவர்கள் இவ்­வா­றான செயல்­களில் ஈடு­பட்­டுள்­ள­தா­கவும் இதில் வேறு ஏதும் உள் நோக்கம் கிடை­யாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோஹன தெரி­வித்தார்.

கொக­ரெல்ல பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சம்­ப­வத்­திலும் குரு­ணாகல் பகுதி சம்­ப­வத்­திலும் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையும் பொலிஸார் கைது செய்­துள்ள நிலையில் அவர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை மேர்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குடித்துவிட்டே இவர்கள் கூச்சலிட்டு இந்த செயலை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர் விசாரணைகளை பொலிஸார் தொடர்வதாக குறிப்பிட்டார்.

இவ்விரு சம்பவங்களை அடுத்து குருணாகல் மாவட்டதுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபரின் விஷேட அறிவித்தலின் பிரகாரம் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.Post a Comment

Protected by WP Anti Spam