ரம்யாவை பார்த்து பாமாவுக்கு திடீர் ஆசை!!

Read Time:2 Minute, 15 Second

unnamed (22)நடிகை பாமாவுக்கு திடீரென்று பாடகி ஆகும் ஆசை வந்திருக்கிறது. குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் எடுபடாமல் இருந்தவர் ரம்யா நம்பீசன். ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். முன்னதாக வெளியான பீட்சா படம் நடிகையாகவும் அங்கீகரிக்க வைத்தது.

இதைப்பார்த்த பாமாவும் ரம்யாவின் வழியை பின்பற்ற முடிவு செய்திருக்கிறாராம். எல்லாம் அவன் செயல், சேவற்கொடி போன்ற படங்களில் நடித்தும் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார் பாமா. விரைவில் திரைக்கு வரவிருக்கும் ராமானுஜம் படத்தில் பிராமணப் பெண்ணாக மடிசார் கட்டி நடித்திருப்பது தன்னை புதிய பரிமாணத்தில் காட்டும் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில் பாட்டு பாடும் ஆசை ஆழமாக அவர் மனதில் பதிந்திருக்கிறது. மலையாளத்தில் வெளியான 100 டிகிரி செல்சியஸ் என்ற படத்தில் அவர் சொந்த குரலில் பாடி இருக்கிறார். இவருடன் அனன்யா, சுவேதா மேனன், மேக்னராஜும் பாடினார்கள். கூட்டத்தோடு கோவிந்தா போட்டதுபோல் சக நடிகைகளுடன் இணைந்து பாடியதால் கோரஸ் பாடகியாகவே தன்னை அடையாளம் காட்டி இருக்கிறது என்று வருத்தப்படுகிறார்.

அடுத்தமுறை சோலோவாக பாடி குரல் வளத்தை நிரூபிக்க முடிவு செய்திருக்கிறார் பாமா. எந்த இயக்குனர் இவருக்கு வாய்ப்பு கொடுத்து புண்ணியம் கட்டப்போகிறாரோ என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் உறவுகொள்ள மறுத்த 25 வயது ஆண் : கத்தியுடன் வீதியில் துரத்திய 52 வயது பெண்!!
Next post பெண்களின் மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய வைத்தியருக்கு அழைப்பு!!