உயிருள்ளவரை இந்தியனே! சானியா உருக்கம்!!

Read Time:2 Minute, 33 Second

407187495Untitled-1ஆந்திராவில் இருந்து சமீபத்தில் தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார்.

தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் 27 வயதான இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இனிமேல் நடைபெறும் தெலுங்கான மாநில வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிகளில் சானியா மிர்சா கலந்து கொள்வார். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து சாதிக்க வசதியாக ஊக்கத்தொகையாக ரூ.1 கோடிக்கான செக்கையும் தெலுங்கானா அரசு சானியாவிற்கு அளித்தது.

இந்நிலையில் தெலுங்கானா தூதராக நியமிக்கப்பட்ட சானியா மிர்சா பாகிஸ்தான் மருமகள் என்று பாரதீய ஜனதா தலைவர் கே.லட்சுமண் சாடினார். இப்பிரச்சினை குறித்து அவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பேசிய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, நாம் ஒரு இந்திய பெண். நான் இந்திய பெண்ணாகவே இருப்பேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் ஒரு இந்தியராகவே இருப்பேன். என்று கூறியுள்ளார்.

மேலும், நான் ஒரு வெளிநாட்டவர் என்று அடையாளம் காட்ட முயற்சிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன் என்றும் சானியா கூறியுள்ளார்.

தெலுங்கானா தூதராக நியமனம் குறித்த சர்ச்சை என்னை காயப்படுத்திவிட்டது. ஒரு சிறிய பிரச்சினைக்காக இவ்வளவு நேரம் செலவிடப்படுகிறது. என்று சானியா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஸ்ருதியின் கையைக் கடித்தது யார்?
Next post பாலியல் பலாத்காரங்களில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்!!