கதை திரைக்கதை வசனம் இயக்கத்திற்காக கிடார் இசை கற்ற டாப்ஸி!!

Read Time:1 Minute, 37 Second

d8215fd8-5532-40a8-8e87-05d3a0565c95_S_secvpfதமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. இப்படத்தைத் தொடர்ந்து ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’, அஜீத் நடித்த ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாகவும் நடித்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் தமிழில் பார்த்திபன் இயக்கியிருக்கும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் கிடார் இசையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியையாக அவர் நடித்திருக்கிறார். தனது கதாபாத்திரம் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக ஒரு முன்னணி கிடார் கலைஞரிடம் முறையாக கிடார் இசையை கற்றுக் கொண்டுள்ளார். இந்த சிறப்பு பயிற்சியுடன் தனது கதாபாத்திரத்தை நன்றாக செய்திருப்பதாக படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.

இதில் மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்ன வென்றால், இப்படத்தில் நடிப்பதற்கான சம்பளத்தை பெற்றுக்கொள்ளும்படி தயாரிப்பு தரப்பு வலியுறுத்தியும், பார்த்திபனிடம் இருந்து பணம் வாங்க மறுத்து விட்டார் டாப்ஸி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் மெட்ராஸ் பட நாயகி!!!
Next post சன்னியாசிகளை அவதூறாக சித்தரிக்கும் சொர்க்கம் என் கையில் படத்துக்கு தடை கேட்டு வழக்கு!!