மீண்டும் கமலுடன் இணையும் ஶ்ரீதேவி?

Read Time:1 Minute, 38 Second

U1பல கஷ்டங்களுக்குப் பிறகு நடிகராகி திரையுலகில் பல சாதனைகளை புரிந்தவர் கமல். அவரைப் போலவே அவரது படங்களும் பல கஷ்டங்களை அனுபவித்து வௌியாகி வசூலில் சாதனைகளை படைக்கின்றன.

தற்போது கமல் இயக்கி நடிக்கும் மலையாளப் படமான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்திற்கும் அதே நிலைமை ஏற்பட்டுள்ளது. த்ரிஷ்யம் கதைக்கு சொந்தம் கொண்டாடி ஒரு கதாசிரியர் வழக்கு தொடுத்து, கமல் ரீமேக் செய்யும் படத்திற்கு தடை வாங்கியுள்ளார்.

ஆனால் கமலோ, வழக்கம் போலவே எதற்கும் அஞ்சாமல் படவேலைகளை தொடர்ந்து செய்துவருகிறார். கமலுக்கு ஜோடியாக நடிக்க முதலில் கௌதமி பெயர் பரிந்துரைக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்த நிலையில், தற்போது ஸ்ரீதேவியிடமும், விருமாண்டி பட நாயகி அபிராமியிடமும் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழில் தனது அடுத்த எண்ட்ரிக்காக காத்திருக்கும் ஸ்ரீதேவி சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தியதுபோல் இந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வார் என்கின்றனர் திரையுலகினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் எனும் நிக்காஹ்!!
Next post இறந்ததாக அடக்கம் செய்யப்பட்ட சிறுவன் உயிருடன் இருந்த அதிசயம்!!