ரஷ்யாவில் போர் விமானம் விபத்துக்குள்ளானது: விமானி பலி!!
தெற்கு ரஷ்யாவில் போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி பலியானார். தொழில்நுட்ப குறைபாட்டால் இவ்விபத்து நடைபெற்றதாக விமான படை தலைவர் விளக்கமளித்துள்ளார்.
என்ன நடந்தது என்று விசாரித்து வருவதாக கூறிய ஜெனரல் விக்டர் போண்டரேவ், முதற் கட்ட தகவலின் படி விமான போக்குவரத்து உபகரணம் பழுதானதால் இவ்விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது என்றார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த போர் விமானங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. எம்.ஐ.ஜி-29 என்ற அந்த போர் விமானம் அங்குள்ள அஸ்ட்ராகான் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டபோது விபத்துக்குள்ளானது.
விமானத்தின் மேற்பார்வையாளர் விமானியை விமானத்தை விட்டு வெளியேறும்போது கூறியும், அவர் விமானத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்தியதால் உயிரிழக்க நேரிட்டதாக பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளரான இகோர் கொனோஷென்கோவ் கூறியுள்ளார். 1980 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இவ்விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கூட சைபீரியாவில் இந்த ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Average Rating