ஆண் பெண்ணாக, பெண் ஆணாக…!!

Read Time:3 Minute, 51 Second

laduஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவை மையமாக வைத்து புதிய படம் ஒன்று உருவாகிறது. இப்படத்திற்கு ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்று பெயர் வைத்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதாநாயகனாக கிரண் மை என்ற ஒரு பெண் நடிக்கிறார். கதாநாயகியாக படத்தின் இயக்குனர் ஜீன்ஸ் நடிக்கிறார். மேலும், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், ஆர்த்தி, மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடிக்கிறார்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜீன்ஸ். படம் குறித்து அவர் கூறும்போது, ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்றால், லட்டுங்கிறது உலகம். அந்த உலகத்துல ஆணும், பெண்ணும் பூந்தி பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்தது தான் லட்டு.

அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம். இந்த ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவுதான் கதை! அந்த கனவு உலகத்துல ஆண்கள் எல்லோரும் பெண்களா இருக்காங்க. பெண்கள் எல்லோரும் ஆண்களா இருக்காங்க.

அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனா அவர்கள் பெண்கள் குணத்தோட மென்மையா, நளினமா இருப்பாங்க. அதுபோல பெண்கள் எல்லோரும் ஆண்களோட குணத்தோட முரட்டுத்தனமா அடாவடியா இருப்பாங்க.

இப்படி ஆண்களும், பெண்களும் உல்டாவா மாறி இருந்தா எப்படி இருக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான முறையில் சொல்லியிருக்கிறேன். நாம் பார்த்து, ரசித்த, எல்லா விஷயங்களுமே அப்படியே மாறி நடந்தா எப்படி இருக்கும் என்று யோசிச்சு பாருங்க, உங்களுக்கே சிரிப்பு வரும்.

இது ஒரு புதுமையான, மிகவும் வித்தியாசமான முயற்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மொத்தம் இரண்டரை மணி நேர படமும் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் நடித்து இதுவரைக்கும் எந்த படமும் வந்ததில்லை. ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ தான் முதல் படம்.

இது முழுக்க முழுக்க காமெடி படம். படத்தை பார்க்கிற ரசிகர்கள் எல்லோரும் வயிறு புண்ணாகும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அதுக்கு நான் பொறுப்பு என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. செல்வா ஜே.கே. இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்கிறார். கேல்வின் சினிமாஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்பநிலா – கவர்ச்சி ரசம்!!
Next post வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடி!!