வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடி!!

Read Time:2 Minute, 49 Second

de5e3de4-613d-4593-8ccd-a9b4ff11bdac_S_secvpfதிண்டுக்கல்லை சேர்ந்த வினோத், சின்னாளப்பட்டி அஞ்சுகம் காலனியை சேர்ந்த சதாபாண்டி(22), சேலம் திருக்குமரன், கன்னியாகுமரி டார்ஜன், வேலூரை சேர்ந்த மனோஜ், சுரேந்தர், அப்துல் சமது உள்பட 11 பேர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–

நாங்கள், திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் இன்ஸ்டிட்டியூட்டில் 2 வருட பட்டபடிப்பு கடந்த 2012 முதல் 2014–ம் ஆண்டு வரை படித்தோம். எங்களுடன் சேர்ந்து மொத்தம் 200 மாணவர்கள் படித்தனர்.

ஒரு மாணவருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் நன்கொடை வசூலிக்கப்பட்டு இங்கு பயின்று முடிந்தவுடன் வெளிநாட்டில் வேலை வாங்கி தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தனர்.

ஆனால் பயிற்சி முடித்து தேர்ச்சி பெற்ற எங்களுக்கு வேலை வாங்கி தரவில்லை. இதுகுறித்து நாங்கள் நிறுவனத்தை நடத்தி வந்தவரிடம் கேட்டபோது, நாகர்கோவிலை சேர்ந்த ஆனந்தன் என்பவரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தார்.

அவரை தொடர்பு கொண்ட போது 14–6–2014–ந்தேதிக்குள் ரூ.20 ஆயிரம் பணம், பாஸ்போர்ட் ஆகியவற்றை மதுரை விராட்டிபத்து பகுதியை சேர்ந்த குமார் என்பவரிடம் கொடுக்குமாறு தெரிவித்தார். நாங்களும் அவரிடம் பணம் மற்றும் பாஸ்போர்ட்டை கொடுத்து வெளிநாடு வேலைக்காக காத்து இருந்தோம். ஒருவாரம் தொடர்பு கொள்வதாக கூறிய அவர் மீண்டும் தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இன்ஸ்டிட்டியூட் நிர்வாகி முருகேசனிடம் கேட்டபோது அவர் முறையான பதில் அளிக்காமல் காலதாமதம் செய்து வந்தார். எனவே எங்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறாரோ? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

எனவே அவர்களிடமிருந்து நாங்கள் கட்டிய பணத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர். புகாரை பெற்ற மாவட்ட எஸ்.பி. விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண் பெண்ணாக, பெண் ஆணாக…!!
Next post சஸ்பெண்டு ஆனதால் விஷம் குடித்து உயிரை மாய்த்த ஊழியர்!!