அரியலூர் தனியார் ஆஸ்பத்திரியில் அக்காவை பார்க்க சென்ற புதுப்பெண் ஓட்டம்!!
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனைமுத்து (வயது 28) இவரது மனைவி வெண்ணிலா (வயது 19) இவர்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் ஆனது.
இந்த நிலையில் வெண்ணிலாவின் அக்கா சகுந்தலாவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
அக்காவை பார்க்க வேண்டும் என்று வெண்ணிலா கூறினார். இதனால் அவரை அழைத்து கொண்டு ஆனைமுத்து அரியலூர் சென்றார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகுந்தலாவை பார்த்து பேசிக் கொண்டு இருந்தனர்.
அப்போது வெளியில் சென்ற வெண்ணிலா மீண்டும் அந்த அறைக்கு திரும்பவில்லை. இதனால் அவரை தேடிய ஆனைமுத்து அரியலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் வெண்ணிலா கடத்தப்பட்டாரா? அல்லது அவராக சென்று விட்டாரா என்பது உள்பட பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.